Charles Santiago |
அணைத்து வித பங்கீடு முறையும் நமது தலையில் வந்து விழ போகின்றது- சார்ல்ஸ் எச்சரிக்கை. Posted: 01 Aug 2014 03:45 AM PDT
சொந்த ஊருக்கு சென்று நோன்பு பெருநாளை முடித்து மறுபடியும் இன்னும் ஓரிரு நாட்களில் நகரம் திரும்பும் பலர் இன்னும் இரண்டு வாரங்களில் தண்ணீர் நெருக்கடிக்கு ஆளாகுவர் என எச்சரித்தார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. இந்த வரட்சி காலத்தில் அடுத்த இரு வாரங்களுக்குள் நீர் சேகரிப்பு பகுதிகளில் மழை பொழியவில்லை என்றால், நாம் அனைவரும் மறுபடியும் மற்றொரு நீர் பங்கீடு பிரச்சனையை சந்திக்கப் கூடிய சாத்தியம் உள்ளது. அதிலும் முன்பை காட்டிலும் இந்த முறை மோசமான பங்கீடு முறையாக இருக்கும் என சார்ல்ஸ் தெரிவித்தார். தண்ணீர் தனியார்மயமாக்குதலை எதிர்க்கும் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளருமான சார்ல்ஸ், மாநில அரசாங்கம் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய உண்மை நிலையை மக்களிடம் ஆரம்பத்திலேயே தெரிவிக்காத செயல் “பொறுப்பற்ற செயல்” என முத்தரையிட்டார். சிலாங்கூர் அரசு மற்றும் லுவாஸ் இவை இரண்டுக்கும் மாநிலத்தில் ஏற்படும் நீர் நெருக்கடி பிரச்சனையை முறையாக கையாளத் தெரியவில்லை எனவும் இந்த இரு தரப்பும் “திறமையற்றது” என கடுமையாக சாடினார் சார்ல்ஸ். இந்த விவகாரத்தைப் பற்றி இரு தரப்பிடமும் பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் அவர்கள் இந்த விஷயத்தை செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் நடந்துக் கொண்டனர். இன்னும் சில வாரங்களில் நிலவவிருக்கும் நீர் நெருக்கடி மற்றும் நீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு இந்த இரண்டு தரப்பும் என்ன தீர்வு கொண்டுள்ளது என சார்ல்ஸ் வினவினார். |
Posted: 01 Aug 2014 02:57 AM PDT மக்களின் நம்பிக்கையை குழைய வைக்கின்றது பாஸ் கட்சி – அம்னோ உடனான உறவை பாஸ் தெளிவு படுத்த வேண்டும் – சார்ல்ஸ் இது முதல் முறை அல்ல. நிச்சயமாக முடிவும் அல்ல. கடந்த கால அனுபவங்களை பார்க்கும் போது, பாஸ் கட்சி மக்கள் கூட்டணி எடுக்கும் சில முடிவுக்கு சற்று எதிர்மறையாகத்தான் உள்ளது. உதாரணத்திற்கு இடை விடாத சில பிரச்சனைகள் நீண்டுக் கொண்டிருக்கின்றன, அதில் இஸ்லாம் மாநிலமாக மாற்றும் திட்டம், இஸ்லாமியம் மற்றும் மலாய் மேலாதிக்கம் போன்ற விஷயங்களில் பாஸ் கட்சி குரங்கு பிடியாக இருந்து வருகின்றது. இதனால் மலேசிய மக்களின் நம்பிக்கையை நாம் இழந்துக் கொண்டு வருகின்றோம் என்பனதனை மறுப்பதற்கில்லை என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. அண்மையில் வாட்ஸ் ஆப் என்ற கைத்தொலைப்பேசி கலந்துரையாடலில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகமட் சூடி மர்சூகி உட்பட பல பாஸ் கட்சி மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு இடையே நடந்த இந்த உரையாடலில் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராஹிமை மாநில மந்திரி பெசாராக தக்க வைக்க அம்னோ – பாஸ் உடன்பாடு ஏற்படலாம் போன்ற ஆருடங்கள் தெரிய வருகின்றது. இந்த தகவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆக, அந்த கலந்துரையாடலில் மூலமாக கசிந்துள்ள விவரங்களை பாஸ் தெளிவு படுத்த வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார். முக்கியாமாக பாஸ் அம்னோவுடன் இணையும் அல்லது உடன்பாடு உள்ள சாத்தியம், மக்கள் கூட்டணி கட்சியிலிருந்து பாஸ் வெளியேறும் சாத்தியம், இன மத ரீதியிலான தேர்தலுக்கு பாஸ் கட்சியின் நிலை என்ன போன்ற பல்வேறு விவரங்களை பாஸ் தெளிவு படுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக சார்ல்ஸ் நினைவுறுத்தினார். அதே சமயத்தில் பாஸ் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் அம்னோவிற்கு சாதகமாக இருப்பது போல் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம் நிலையை தக்க வைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. இது மக்கள் கூட்டணி ஒருமித்த கருத்தோடு எடுத்த முடிவிற்கு எதிராக உள்ளது என தெரிவித்த சார்ல்ஸ், பிகேஆர், பாஸ் மற்றும் டிஏபி ஆகிய மூன்றும் வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்டிருந்தாலும், ஒரே தளத்தில் மக்களுக்காக உழைப்போம் மக்கள் நலன் காக்கும் அரசியல் கட்சிகளாக இயங்கும் தலைவர்களாக இருப்போம் என்று ஒன்று கூடினோம். பொதுத் தேர்தலுக்கு முன்பு, நேர்மையான மற்றும் தூய்மையான தேர்தல் நடத்த பட வேண்டும் என சக மலேசியர்கள் மற்றும் பெர்சே தலைவர்களுடன் ஒன்றிணைந்து நாம் கடுமையாக போராடினோம். 2008 பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. மக்களின் ஆதரவு முழுமையாக இருந்தது. நாம் நேர்மையான நியாயமான அரசாங்கத்தையும் ஆட்சியும் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் நமக்கு வாக்களித்தனர். ஆனால், இன்று அதை பாஸ் கட்சி சீர்குலைக்க பார்கின்றது என மிக வேதனையாக கூறினார் சார்ல்ஸ். ஆக பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ள பாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான பல விசயங்களை பாஸ் தெளிவு படுத்த கடமை பட்டுள்ளது. அதே சமயத்தில் மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையே மற்றுமின்றி பாஸ் கட்சிக்குள்ளே பிளவை ஏற்படுத்த சதி செய்யும் பாஸ் கட்சி கருப்பு ஆடுகளை அதன் கட்சி தலைவர்கள் எப்படி கையாள போகின்றனர் என்பதனை சிந்தித்து செயல் பட வேண்டும். மறுபுறம், மக்கள் கூட்டணி, இதை போல் மேலும் சர்ச்சைகளும் எழாமல், பாஸ் கட்சியுடன் கைகோர்த்து ஒரே கொள்கையில் கீழ் ஒன்றுபட்டு செயல் படும் யுக்திகளை தீட்ட வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார். இவற்றை செய்ய தவறினால், நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகத்தான் இது இருக்கும் என சார்ல்ஸ் எச்சரித்தார். |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |